முகம் பொலிவு பெற–இய‌ற்கை வைத்தியம்,

Loading...

முகம் பொலிவு பெற--இய‌ற்கை வைத்தியம்,முக அழகு என்பது அகத்தின் வெளிப்பாடு தான். அகம் என்ற உடலின் உட்பகுதியில் மனம் மற்றும் உடலின் எந்த உறுப்பு பாதித்தாலும் அதன் வெளிப்பாடு முகத்தில் தெரியவரும்.

மனதையும், உடலையும், தியானம், மற்றும் மருத்துவம் மூலம் குணப்படுத்திவிடலாம். ஆனால் அதன் வெளிப்பாடாக முகத்தில் உண்டான பாதிப்புகளை அகற்றி முகத்தைப் பொலிவுறச் செய்ய இரசாயன வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரான கிரீம்களை பன்படுத்தினால் அவை முகத்திற்கு பொலிவைக் கொடுக்காமல் பாதிப்புகளையே கொடுக்கும்.
ஆனால் இயற்கையினால் உண்டான மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவு பெறும்.


எல்லோராலும் எளிதில் பயன்படுத்தக்கூடிய எளிய வைத்திய முறை இதோ..

பச்சை பயறு – 200 கிராம்

சந்தனம் – 50 கிராம்

இரண்டையும் ஒன்று சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை குளிக்கும்போது உடல் முழுவதும், முகத்திலும் தேய்த்து சோப்புக்குப் பதிலாக உபயோகப்படுத்தினால் முகம் பொலிவு பெறும். உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கோஷ்டம் வாங்கி இடித்து பொடியாக்கி அதனுடன் எலுமிச்சம் பழத் தோலை காயவைத்து இடித்து சேர்த்து நீரில் குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, தழும்புகள் கரும்புள்ளி போன்றவை நீங்கும்.

வியர்வை நாற்றம் நீங்க

எவ்வளவுதான் நவீன குளியல் சோப் வாங்கி தேய்த்துக் குளித்தாலும் சிலருக்கு உடலில் வியர்வை நாற்றமாக இருக்கும். அதற்கு காரணம் வியர்வைத் துளைகளில் உள்ள கிருமிகளேயாகும்.


இத்தகைய நாற்றத்தைப் போக்க வழி..

கோரைக்கிழங்கு – 50 கிராம்
கிச்சிலிக் கிழங்கு – 50 கிராம்
ஆவாரை இலை – 50 கிராம்
எலுமிச்சம் பழத்தோல் – 50 கிராம்
சந்தனம் – 50 கிராம்

இவற்றை எடுத்து இடித்து பொடியாக்கி அதனுடன் பாசிப்பயறு மாவு 100 கிராம் சேர்த்து வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு முன் 2 ஸ்பூன் அளவு எடுத்து நீரில் குழைத்து உடலெங்கும் பூசி காய்ந்தபின் குளித்தால் வியர்வை நாற்றம் விரைவில் நீங்கும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply