முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் கலக்கல் சாறு

Loading...

முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் கலக்கல் சாறு
முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் கலக்கல் சாறு

ட்ரீட்மெண்ட்…
கேரட் சாறு-1 டீஸ்பூன்,
தேங்காய் பால்-1 டீஸ்பூன்…
இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து அலம்புங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வரவேண்டும்.

உங்கள் முகத்தை மெருகூட்ட ஒரு `பளிச்’ பேக்

இருக்கிறது.
முல்தானிமட்டி-1 டீஸ்பூன்,
தேங்காய் பால்-1 டீஸ்பூன்…
இரண்டையும் கலந்து முகத்துக்கு `பேக்’ போடுங்கள். வாரம் ஒருமுறை இந்த `பேக்’ போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணையை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கிவிடும்.

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு அசத்தல் `பேக்’

இருக்கிறது.
உருளைக்கிழங்கு ஜுஸ்-1 டீஸ்பூன்,
தேங்காய் பால்-1 டீஸ்பூன்,
பயத்த மாவு-1 டீஸ்பூன்…
மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு`பேக்’ போடுங்கள். காய்ந்ததும் அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த `பேக்’ போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply