மிஸ்ரி ரொட்டி

Loading...

மிஸ்ரி ரொட்டி
தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், கடலை மாவு – அரை கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், ஓமம் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, நெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
கோதுமை மாவு, கடலை மாவு, சீரகம், ஓமம், பெருங்காயத்தூள், உப்பு, 2 டீஸ்பூன் நெய் ஆகியவற்றைக் கலந்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். மாவை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக திரட்டி, தோசைக் கல்லில் போட்டு, நெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

சப்பாத்தியில் ஒரு பக்கம் நெய் தடவி பயணத்துக்கு எடுத்துச் செல்லலாம். சாப்பிடும்போது உள்ளே ஜாம் அல்லது ஊறுகாய் தடவி ரோல் செய்து சாப்பிடலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply