மிளகு அவல்

Loading...

மிளகு அவல்
தேவையானவை:
அவல் – 250 கிராம், மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
அவலில் தண்ணீர் விட்டு நன்கு களைந்து, தண்ணீரை வடித்து தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து, மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து, அவலையும் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு:
புளித் தண்ணீரில் அவலை சேர்த்துக் களைந்து, தண்ணீர் வடித்து எடுத்தும் இதை செய்யலாம்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN