மிளகாய் வடை

Loading...

மிளகாய் வடை
தேவையானவை:
சிவப்பரிசி, துவரம்பருப்பு – தலா ஒரு கப், பட்டை – சிறு துண்டு, லவங்கம் – ஒன்று, காய்ந்த மிளகாய் – 10, பூண்டு – 6 பல் (விழுதாக அரைக்கவும்), சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்க வும்), கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
சிவப்பரிசி, துவரம் பருப்பை ஒன்றாக சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, அரிசி – பருப்பு டன் பட்டை, லவங்கம், காய்ந்த மிள காய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். மாவை வழித்தெடுக்கும் முன் பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங் காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இந்த மாவை வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.

குறிப்பு:
இதை வேறொரு முறையிலும் செய்யலாம். மாவை சற்று தளர்வாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை ஒரு சின்னக் குழி கரண்டியில் விட்டு, வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து, ஒரு ஜல்லிக்கரண்டி மேல் வைத்து அதன் மீது தோசைத் திருப்பி கொண்டு அழுத்தி எடுத்து சுடச்சுட சாப்பிட்டால்… சுவை ஆளை அசத்தும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply