மின்னல் வேக தரவு கடத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை

Loading...

மின்னல் வேக தரவு கடத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனைஅசுர வளர்ச்சி கண்டுவரும் தொழில்நுட்ப உலகில் தரவுப் பரிமாற்றம் என்பது இன்றியமையாததாக விளங்குகின்றது.
அதிலும் இன்று அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டுவரும் தரவுப் பரிமாற்ற வேகமானது புதிய தொழில்நுட்பங்களின் ஊடாக காலத்திற்கு காலம் அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஒளியியல் தொழில்நுட்பத்தின் (Optical Communication System) ஊடாக செக்கனுக்கு 1.125 ரெறா பைட்ஸ் வேகத்தில் தரவு கடத்தும் முறையினை கண்டுபிடித்து ஐக்கிய இராச்சிய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

இவ் வேகமானது ஐக்கிய இராச்சியத்தில் தற்போது காணப்படும் பல்வேறு தரவு பரிமாற்ற வேகத்தினதும் சராசரியின் 50,000 மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், Games of Thrones தொடரின் HD பதிப்புக்களை 1 செக்கனில் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply