மிக்ஸ்டு சேவை

Loading...

மிக்ஸ்டு சேவை

தேவையானவை:
புழுங்கல் அரிசி – 250 கிராம், பொடியாக நறுக்கிய அல்லது துருவிய கேரட், பொடியாக நறுக்கிய குடமிளகாய் , தேங்காய் துருவல், பச்சைப் பட்டாணி – தலா ஒரு கப், சிறிய பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) – 3, எலுமிச்சம் பழம் – ஒன்று, கடுகு – தேவையான அளவு, பொட்டுக்கடலை – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு – 10, எண்ணெய் – 6 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.செய்முறை:
அரிசியை ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து களைந்து, மிக்ஸியில் கெட்டியாகவும் நைஸாகவும், தோசை மாவு பதத்தில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, மாவை சிறிது உப்பு சேர்த்துக் கலந்து, கெட்டியாகக் கிளறவும். கிளறிய மாவை கெட்டியாக பிசைந்து உருட்டவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். சேவை பிழியும் அச்சில் உருண்டைகளைப் போட்டு, சேவையாக பிழிந்து, அதை மூன்று பங்குகளாக பிரிக்கவும். கேரட், பட்டாணி, குடமிளகாய், சிறிதளவு பச்சை மிளகாயை வதக்கி ஒரு பங்கு சேவையுடன் சேர்த்து, கடுகு தாளித்து கலக்கவும். தேங்காய் துருவலில் சிறிதளவு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து தேங்காய் சிவக்கும் வரை வறுத்து மற்றொரு பங்கு சேவையுடன் கலந்து சிறிதளவு வறுத்த முந்திரி சேர்க்கவும். கடுகு, சிறிது பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, மஞ்சள்தூள் சேர்த்து தாளித்து மீதமுள்ள சேவையுடன் கலந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும். மீதமுள்ள முந்திரியை சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி மேலே தூவவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply