மல்டி பருப்பு வடை

Loading...

மல்டி பருப்பு வடை
தேவையானவை:
முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய கொள்ளு – தலா ஒரு கப், துவரம்பருப்பு, உளுந்து – தலா ஒரு கப் (ஊற வைக்கவும்), மிளகாய் வற்றல் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
கொண்டைக் கடலை, கொள்ளு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை ஒன்றாக சேர்த்து… மிளகாய் வற்றல், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்து, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிப் போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.


குறிப்பு:
இதே முறையில் சோளம், முளைவிட்ட பச்சைப் பயறு, மொச்சை போன்றவற்றை வைத்தும் தயாரிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply