மலட்டுத்தன்மையை போக்கும் தன்மை கொண்ட வாழைப்பூ

Loading...

மலட்டுத்தன்மையை போக்கும் தன்மை கொண்ட வாழைப்பூவாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் மலட்டுத்தன்மையை போக்கும்தன்மை கொண்டவை.
துவர்ப்பு சுவையுடைய வாழைப்பூ, ரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையுடையது.

உடலில் உள்ள புண்களை ஆற்றி நரம்புகளுக்கு சக்தியளிக்கும் ஆற்றலும் இதில் இருக்கிறது.

மேலும், வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒரு முறை உணவில் வாழைப்பூவை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

வாழைப்பூவில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவும். சர்க்கரை நோயாளிகளின் நரம்புகள் வலிமையடையும்.

மேலும், வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கலும் மறைந்து போகும்.

உடல் சூடு காரணமாக உண்டாகும் வயிற்றுக் கடுப்பு, சீதபேதி மற்றும் தொடர் இருமலுக்கும் வாழைப்பூ சிறந்த மருந்து.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்த வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை எடுத்து, அரைத்து 100 மி.லி. நீரில் கலந்து வடிகட்டவேண்டும்.

அதில் தேவைக்கு பனங்கற்கண்டு கலந்து அருந்தினால், உதிரப்போக்கு கட்டுப்படும்.

மேலும், குழந்தைப் பேறினை எதிர்பார்க்கும் தம்பதிகள் வாரத்தில் ஒருநாள் வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply