மரவள்ளிக்கிழங்கு அடை

Loading...

மரவள்ளிக்கிழங்கு அடை

தேவையானவை:
இட்லி அரிசி – 250 கிராம், மரவள்ளிக்கிழங்கு – ஒன்று, துவரம்பருப்பு – ஒரு கப், கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, மிளகாய் வற்றல் – மூன்று, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு,செய்முறை:
இட்லி அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிளகாய் வற்றல் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஒன்றாக ஊற வைத்து களைந்து தனியாக அரைக்கவும். இரண்டு மாவையும் ஒன்று சேர்க்கவும். மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி, கேரட் துருவியில் துருவி, மாவுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, கறிவேப்பிலை நறுக்கிப் போடவும். தோசைக்கல்லில் மாவை அடைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.குறிப்பு:
மரவள்ளிக்கிழங்கு அதிகமாக கிடைக்கும்போது வறுவல் தயாரித்து வைக்கலாம். வேக வைத்து வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply