மசாலா பொரி

Loading...

மசாலா பொரி
தேவையானவை:
அரிசிப் பொரி – 2 கப், பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், கருவடகம் – 2 டீஸ்பூன், பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், மிளகு – 4, தனியா, சீரகம் – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2 (கிள்ளவும்), மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன் , தேங்காய் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – சிறிதளவு.


செய்முறை:
கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, மிளகு, தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் கருவடகம் சேர்த்து, சிவந்ததும் பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து, ஒரு முறை கிளறி, அரிசிப் பொரி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கி இறக்கவும்


கருவடகம் செய்முறை:
உளுத்தம்பருப்பு ஒரு பங்கு, பாசிப்பருப்பு அரை பங்கு எடுத்து ஊறவைத்து வடித்து, 3 பங்கு சாம்பார் வெங்காய விழுது, உப்பு சேர்த்து அரைத்து, மாவைக் கிள்ளி எடுத்து, பிளாஸ்டிக் பேப்பரில் போட்டு, வெயிலில் வைத்து காயவைத்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply