பொங்கல்

Loading...

பொங்கல்
தேவையானவை:
அரிசி – 250 கிராம், பாசிப்பருப்பு – ஒரு சிறிய கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – 2 டீஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – 100 மில்லி, வறுத்த முந்திரிப்பருப்பு – 10, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
பாசிப்பருப்பையும் அரிசியும் ஒன்று சேர்த்து லேசாக சூடு வரும் வரை வறுத்து, ஒரு பங்கு அரிசிக்கு ஐந்து பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகு, சீரகத்தை லேசாக மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு இஞ்சி, மிளகு – சீரகப் பொடி, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து… கறிவேப்பிலை, வறுத்த முந்திரி சேர்க்கவும். இதை வேகவைத்த சாதத்துடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
குறிப்பு: தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன். சாம்பார், கொத்சுவும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply