பைனாப்பிள் ஜுஸ்

Loading...

பைனாப்பிள் ஜுஸ்


தேவையான பொருள்கள்:

அன்னாசிப்பழம் -1

சா்க்கரை -தேவைக்கேற்ப

தண்ணீர்-1லிட்டர்

சிட்ரிக்அமிலம் -2கிராம்

கலர் பொடி -1/2 ஸ்பூன்

எசன்ஸ் -கால் ஸ்பூன்


செய்முறை:

 

பழத்தின் மேல்பாகத்தையும்,தோலைச் சுற்றியுள்ள இலைகளையும் அகற்றி நல்ல தண்ணீரில் கழுவியபின், கத்தியால் தோலை அகற்றவும் .

பழத்தின் மேலுள்ள குழிபோன்ற மொக்குகளையும்,கெட்டுப்போன பகுதிகளையும் ஒதுக்கிவிட்டு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கூழாக்கவும். சாற்றைப் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும்.

மேலும் சா்க்கரையைத் தண்ணீரில் கலந்து பாகு வைத்து அதை வடிகட்டிய சாறுடன் கலந்து கொள்ளவும். சிட்ரிக் அமிலத்தையும் சிறிது தண்ணீரில் கலந்து சாற்றில் சோக்கவும். அத்துடன் நிறப் பொடியையும் எசன்ஸையும் கலந்து கொதிநீரில் சுத்தப்படுத்தப்பட்ட பாட்டில்களில் ஊற்றி காற்றுப்புகா வண்ணம் அடைத்து சேமித்து வைக்கவும்..

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply