பேஸ்புக்கின் பிறந்த நாள்: மார்க் ஜுக்கர்பெர்க் பற்றிய ஆச்சரிய தகவல்கள்

Loading...

பேஸ்புக்கின் பிறந்த நாள் மார்க் ஜுக்கர்பெர்க் பற்றிய ஆச்சரிய தகவல்கள்பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடங்கப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகின்றன.
பேஸ்புக்கின் பிறந்த நாளை நண்பர்கள் தினமாக கொண்டாடும்படி மார்க் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மார்க் ஜுக்கர்பெர்க் பற்றிய சில ஆச்சரிய தகவல்களை பார்ப்போம்.

*மார்க் தனது 12வது வயதிலேயே பிரோகிராமிங் எழுத தொடங்கிவிட்டார். அவரது ஆர்வத்தை பார்த்த பெற்றோர்கள் அவருக்கு கணணி தொடர்பாக பயிற்சி அளிப்பதற்காக ஒரு ஆசிரியரை நியமித்தனர்.

ஆனால் சில நாட்களிலேயே மார்க்கின் திறமையை கண்டுவியந்த ஆசிரியர் அவரை பெரிய மேதை என்று அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.

* உயர்கல்வியை முடிப்பதற்கு முன்பே மார்க்கை தங்களின் நிறுவனத்தின் பணியமர்த்த மைக்ரோசொப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டிபோட்டன. ஆனால் மார்க் மறுத்துவிட்டார்.

* 2004 ஆம் ஆண்டு தான் படித்துகொண்டிருந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஓய்வறையில் இருந்து பேஸ்புக்கை தொடங்கினார். பேஸ்புக் தொடர்பான ஆராய்ச்சிலேயே தனது நேரத்தை செலவிட்டதால் கல்லூரியில் இருந்து பாதியிலேயெ வெளியேற்றப்பட்டார்.

* மார்க்குக்கு நிறக்குருடு நோய் உண்டு. சிவப்பு, பச்சை போன்ற நிறங்கள் அவருக்கு சரியாக தெரியாது. நீல நிறத்தை மட்டுமே அவரால் தெளிவாக பார்க்கமுடியும். இதனால் தான் பேஸ்புக்கின் முகப்புக்கு நீல நிறம் வழங்கப்பட்டுள்ளது.

* மார்க்கின் ஆசை நாயின் பெயர் பீஸ்ட்(BEAST). இதற்கும் பேஸ்புக்கின் தனி பக்கம் உண்டு. சுமார் 22 லட்சம் பேர் இந்த பக்கத்தை லைக் செய்துள்ளனர்.

* தனது மனைவியான Priscilla chanஐ மார்க் முதன் முதலில் பார்த்த நிகழ்வே ஆச்சரியம் அளிக்கக்கூடியது. கல்லூரி காலத்தின் போது விருந்து ஒன்றில் மார்க் கலந்துகொண்டார். அப்போது கழிவறைக்கு செல்வதற்காக வரிசையில் நிற்கும்போது தான் Priscilla chanஐ பார்த்துள்ளார். பின்னர் பழக்கம், நட்பு, காதல், திருமணம் என தொடர்ந்தது இவர்களின் உறவு.

* மேலும் தனது காதலியின் குடும்பத்தினருடன் பேச வேண்டும் என்பதற்காகவே சீன மொழியை கற்றுக்கொண்டார்.

* மார்க்குக்கு ஆண்டு தீர்மானம் எடுத்துகொள்வது என்பதில் மிகவும் விருப்பம். கடந்த 2009ஆம் ஆண்டு முழுவதும் டை அணிந்துகொள்வது என்று தீர்மானம் எடுத்தார். அதன் படியே ஆண்டு முழுவதும் டை அணிந்தார். இந்த ஆண்டில் தினமும் 1 மைல் தூரம் ஓடவேண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளார்.

* தனது சொத்தில் பாதியை நன்கொடையாக அளிப்பதற்கான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

மார்க்கின் ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா? வெறும் ஒரு டொலர் தான். அப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸும் இதே போன்று ஒரு டொலர்தான் ஊதியம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply