பூந்தி தயிர்வடை

Loading...

பூந்தி தயிர்வடை
தேவையானவை:
உளுத்தம்பருப்பு – 200 கிராம், கராபூந்தி – 100 கிராம், தயிர் (புளிக்காதது) – 250 மில்லி, கேரட் துருவல் – 4 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து தண்ணீரை வடிகட்டி… பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். தண்ணீரை லேசாக சூடாக்கி வடைகளைப் போட்டு, உடனே எடுத்து தயிரில் போட்டு, ஒரு அகலமான தட்டில் பரவலாக வைத்து, மேலே கேரட் தூவி, பூந்தி சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply