பூக்கள் வாடுகின்றனவா? நீரூற்றுங்கள் என்று செய்தியனுப்பும் புதிய iPhone App!

Loading...

பூக்கள் வாடுகின்றனவா  நீரூற்றுங்கள் என்று செய்தியனுப்பும் புதிய iPhone App!எங்களில் பலர் தாவரங்களைப் பராமரிக்கத் தெரியாது அவற்றை வாடி அழியவிட்டுவிடுகின்றோம்.

ஆனால் இதற்கும் புதிதாக ஒரு மென்பொருள் iPhone இல் வந்துள்ளது. iPhone ஐப் பயன்படுத்துபவர்கள் உங்களது தாவரச் சாடிக்குள் பொருத்தக்கூடிய கருவியொன்றை வாங்கமுடியும்.

அடுத்து இதற்கென ஒரு மென்பொருளும் உள்ளது. நீங்கள் ஒவ்வொரு தடவையும் நீர் ஊற்றவேண்டிய நேரத்தினை அல்லது வெயில் தேவை அல்லது வெப்பநிலை மாற்றம் போன்றவற்றை ஒரு குறுஞ்செய்திமூலம் அனுப்பிவைக்கும்.

இந்த உணரிதான் உங்களது தாவரத்துடன் பொருத்தப்படும். இதுதான் நீர்மட்டத்தினையும் வெப்பநிலையையும் கண்காணித்து உங்களது iPhone இற்கு அனுப்பிவைக்கும்.

பெரும்பாலும் எச்சரிக்கைகளையே இது அனுப்பிவைக்கும். Koubachi Wi-fi Plant Sensor மற்றும் அதற்குரிய App என்பன 99 டொலரிற்குக் கிடைக்கும்.

ஒவ்வொரு ஆபத்து எச்சரிக்கை வரும்போதும் உங்களது iPhone ஒரு பீப் ஒலியை வெளியிடும்.

இந்தக் கருவி சுவிஸ் மற்றும் ஜேர்மனி தொழிநுட்பப் பல்கலைக்கழகங்களின் பழைய மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு தடவையில் பல தாவரங்களையும் கண்காணிக்கமுடியும்.

சில நாட்கள் இதனைச் சீராக்கத் தேவையாயிருக்கும். பின்னர் இது சுயமாக இயங்கத்தொடங்கிவிடும். இதற்கு 2 AA மின்கலங்கள் தேவைப்படும். 18 மாதங்களிற்கு இந்த மின்கலங்கள் பயன்பாட்டில் இருக்கும்.

தாவரத்தில் பொதிக்கப்படும் கருவி. இது iPhone இற்கு அல்லது கணினிக்கு WiFi மூலம் தகவல்களை அனுப்பிவைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply