புழுங்கலரிசி ஆவி உருண்டை

Loading...

புழுங்கலரிசி ஆவி உருண்டை
தேவையானவை:
புழுங்கலரிசி – ஒரு கப், தேங்காய் துருவல் – கால் கப், நல்லெண்ணெய், உப்பு – தேவை யான அளவு.
தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, பெருங் காயத்தூள் – கால் டீஸ்பூன்.


செய்முறை:
புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக் கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப் பிலை தாளித்து… அதனுடன் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து கை விடாமல் நன்கு கிளறவும். மாவு வாணலியில் ஒட்டாமல் பந்து போல வரும் சமயம் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். மாவு சற்று ஆறியதும் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கலாம். மாவை உருட்டி உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டி, இட்லித்தட்டில் வேகவிட்டும் எடுக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply