புளி சாதம்

Loading...

புளி சாதம்
தேவையானவை:

உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப், கெட்டியான புளிக்கரைசல் – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் (விருப்பப்பட்டால்) – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – கால் கப், கடுகு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, கறிவேப்பிலை – சிறிதளவு, பெருங்காயம் – ஒரு சிறிய கட்டி (பொடிக்கவும்), வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்.


வறுத்துப் பொடிக்க:

மல்லி (தனியா) – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4 ( இவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும்).


செய்முறை:

கடாயில் நல்லெண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு நன்கு வறுத்து, கடுகு சேர்த்து, பொரிந்ததும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் சேர்த்து, சிவந்ததும் கறிவேப்பிலை, வேர்க்கடலை சேர்த்துக் கிளறி, கெட்டியான புளிக்கரைசலை சேர்க்கவும். உப்பு, மஞ்சள்தூள் போட்டு நன்றாக கொதிக்கவிடவும். பச்சை வாசனை போனதும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து, எண்ணெய் மேலே மிதந்து வரும்போது, விருப்பப்பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கவும் (பொடி போட்டு ரொம்ப நேரம் கொதிக்க வேண்டாம்). உதிரான சாதத்தில் முதலில் புளிக்காய்ச்சலில் உள்ள நல்லெண்ணெயை சிறிது விட்டு கலந்து… பிறகு, புளிக்காய்ச்சல் விட்டு நன்றாகக் கலக்கவும். புளிசாதம் ஊற ஊற சுவை அதிகரிக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply