புளியோதரை இடியாப்பம்

Loading...

புளியோதரை இடியாப்பம்
தேவையானவை:
இட்லி அரிசி – 250 கிராம், காய்ந்த மிளகாய் – 7, புளி – 50 கிரம், வறுத்த வேர்க்கடலை – 25 கிராம், தனியா – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், விரலி மஞ்சள் – ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), பொடித்த வெல்லம் – சிறிதளவு, பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கறி வேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் (புளிக்காய்ச்சலுக்கு) – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
இடியாப்பத்தை, பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் வெந்தயம், 2 காய்ந்த மிளகாய், தனியா, மஞ்சள் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண் ணெய் விட்டு, கடுகு தாளித்து, 5 காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, கடலைப்பருப்பு, வறுத்த வேர்க்கடலை சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். புளியை தேவையான தண்ணீர்விட்டு கரைத்து சேர்த்து, உப்பு சேர்த்து, கொதிக்கவிடவும். வறுத்து அரைத்து வைத்திருக் கும் பொடியை இதனுடன் சேர்த்து, வெல்லம் சேர்த்து கெட்டியானவுடன் இறக்கினால்.. புளிக்காய்ச்சல் தயார்.
இடியாப்பத்துடன் புளிக்காய்ச்சல் சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: கடைகளில் கிடைக்கும் புளியோதரை மிக்ஸ், புளியோதரைப் பொடி சேர்த்தும் செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply