புளிச்ச கீரை சாப்பிடுங்கள்!

Loading...

புளிச்ச கீரை சாப்பிடுங்கள்!தினமும் உணவில் அதிக அளவு கீரைகள் சேர்ப்பது நல்லது.
நாம் சாப்பிட்ட உணவு சீரணமடைய கீரைகளை சாப்பிட வேண்டும்.

கீரைகளில் ஒன்றான, புளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது.

வலி, வீக்கத்தை போக்கும். புண்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது. புளிச்ச கீரையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. தோல், எலும்புகள் பாதிப்படைவதை தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

புளிச்ச கீரையை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும்.

புளிச்ச கீரையின் பூக்களை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.


இருமலுக்கான மருந்து

பூக்களை நசுக்கி சாறு எடுக்கவும். ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும்.

இதை சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும். சுவாச கோளாறை போக்குகிறது. வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்ச கீரை பசியை தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தி உடையது.

பல்வேறு நன்மைகளை கொண்ட இந்த கீரை புளிப்பு சத்தை உடையது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

வயிற்று புண்களை ஆற்றும். பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, அரிப்பு, மயக்கம் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply