புல்கா

Loading...

புல்கா

தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், தண்ணீர் – தேவையான அளவு, எண்ணெய், நெய் – சிறிதளவு, உப்பு – 2 சிட்டிகை.செய்முறை:
கோதுமை மாவில் முதலில் உப்பு சேர்த்துப் பிசிறி, சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் பிசையவும். பிசைந்த மாவின் மீது சில துளி எண்ணெய் தடவி நன்கு அடித்துப் பிசையவும். 3 மணிநேரம் ஊறவிடவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, மேலே சிறிதளவு மாவு தூவி சப்பாத்தியாக இடவும். சூடான தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போடவும். அதன் மேல் சிறு கொப்புளங்கள் வரும்போது சட்டென்று திருப்பி போட்டு சில நொடிகள் வேகவிடவும். இதை ஒரு இடுக்கியில் எடுத்து நேரடியாக எரியும் தணலில் காட்டி, `புஸ்’ என்று உப்பி வந்ததும் எடுத்து, உலர்ந்த, மெல்லிய துணியில் போட்டு, தேவைப்பட்டால் நெய் தடவி மூடி, சேமித்து வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply