பீன்ஸ் பருப்பு உசிலி

Loading...

பீன்ஸ் பருப்பு உசிலி
தேவையானவை:
பீன்ஸ் – 200 கிராம், துவரம்பருப்பு – 2 கப், கடலைப்பருப்பு – அரை கப், காய்ந்த மிளகாய் – 3, கடுகு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
பீன்ஸை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவிடவும். கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வேக வைத்த பீன்ஸை தண்ணீர் வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… அரைத்த பருப்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும். பின்பு பீன்ஸையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு:
இதே முறையில் கோஸ், அவரைக்காய், கொத்தவரங்காயிலும் பருப்பு உசிலி தயாரிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply