பீட்ரூட் பச்சடி-ஹெல்த்தி சைடுடீஷ்

Loading...

பீட்ரூட் பச்சடி-ஹெல்த்தி சைடுடீஷ்தேவையானவை: பீட்ரூட் – 1, இஞ்சி – சிறியது, பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை, பச்சை மிளகாய் – 1, கெட்டி தயிர் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட், இஞ்சி இரண்டையும் தோலைச் சீவி, மெல்லியதாகத் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பவுலில், பீட்ரூட் துருவல், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, பெருங்காயத் தூள் தூவி, தயிரைச் சேர்க்கவும். இதே முறையில் பீட்ரூட்டுக்குப் பதிலாக, வெள்ளரிக்காய், வாழைத் தண்டு, கேரட் சேர்த்துச் சாப்பிடலாம்.

பலன்கள்: அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இரும்புச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்படும். மேலும், கோலின், புரதம், கொழுப்பு, கார்போஹைட்
ரேட்ஸ், நார்ச்சத்து இதில் ஓரளவு கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்னை வராது. பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து இருப்பதால், பற்கள், எலும்புகளுக்கு நல்ல உறுதியைத் தரும். சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply