பிஸிபேளாபாத்

Loading...

பிஸிபேளாபாத்
தேவையானவை:
அரிசி – 500 கிராம், துவரம்பருப்பு – 400 கிராம், சின்ன வெங்காயம் (தோல் உரித்தது) – 20, உருளைக்கிழங்கு, கேரட், குடமிளகாய் – தலா ஒன்று, பீன்ஸ் – 10, உரித்த பச்சைப் பட்டாணி – ஒரு கப், புளி – 25 கிராம், காய்ந்த மிளகாய் – 4, கொப்பரைத் தேங்காய் – பாதி அளவு, தனியா, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி – 6 டீஸ்பூன், நெய் – 100 மில்லி, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், புதினா – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
அரிசியுடன் பருப்பு சேர்த்து, ஒரு பங்குக்கு நான்கு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து ஐந்து விசில் விட்டு இறக்கவும். கேரட், உருளை, பீன்ஸ், குடமிளகாய் எல்லாவற்றையும் நறுக்கி, சின்ன வெங்காயம், பட்டாணி சேர்த்து நெய் விட்டு வதக்கவும். புளியை அரை லிட்டர் தண்ணீர் விட்டு கரைத்து, வதக்கிய காய்களுடன் சேர்த்து… உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு… காய்ந்த மிளகாய், கொப்பரைத் தேங்காய் துண்டுகள், தனியா, கடலைப்பருப்பை வறுத்து மிக்ஸியில் பொடித்து, கொதிக்கும் சாம்பாருடன் சேர்த்து மேலும் கொதிக்க விட்டு இறக்கவும். வேக வைத்த சாதம் – பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, சாம்பாரை ஊற்றி நன்கு மசிக்கவும். புதினாவை வதக்கிப் போட்டு நன்கு கலக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply