பிரெட் – ஆலு கபாப்

Loading...

பிரெட் - ஆலு கபாப்
தேவையானவை:
உருளைக்கிழங்கு – 2, பச்சைப் பட்டாணி – ஒரு கப், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மைதா – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு – சிறிதளவு, பிரெட் தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணியை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும், மைதாவை அரை கப் நீரில் கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளை – பட்டாணி கலவையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பிசைந்து விரும்பிய வடிவத்தில் ‘கபாப்’ தயார் செய்து கொள்ளவும். கபாப்பை மைதா கரைசலில் தோய்த்தெடுத்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்து, பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply