பிரபுதேவா படத்துக்கு நான்கு இசையமைப்பாளர்கள்

Loading...

பிரபுதேவா படத்துக்கு நான்கு இசையமைப்பாளர்கள்

பிரபுதேவா தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் வில்லன் நடிகர் சோனு சூத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால், இசையமைப்பாளர்களின் பெயர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஏ.எல்.விஜய் இயக்கிய முதல் படமான ‘கிரீடம்’ முதல் கடைசியாக வெளிவந்த ‘இது என்ன மாயம்’ படம் வரை ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால், ஏ.எல்.விஜய் இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஜி.வி.பிரகாஷும் நான்கு இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply