பருப்பு வடை

Loading...

பருப்பு வடை

தேவையானவை:

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு.செய்முறை:

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடிகட்டி… காய்ந்த மிளகாய் இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாகவும், சிறிது கொரகொரப்பாகவும் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply