பருக்கள் நீங்க.

Loading...

பருக்கள் நீங்க.அழகான முகத்தின் அழகையும், கவர்ச்சியையும் கெடுப்பது பருக்களும், வடுக்களும் தான். கருந்திட்டுகள் இருந்தாலே கவலை சூழ்ந்துகொள்ளும்.
இதனுடன் பரு, வடுக்கள் வேறு இருந்தால் பெண்கள் மன சோர்வுக்கு ஆளாகிவிடுவார்கள். பருக்களையும், வடுக்களையும் போக்குவதற்காக கடைகளில் விற்பனை செய்யப்படும் இரசாயனம் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கும் பெண்கள் பலர் உள்ளனர்.
இது சில மாதங்களுக்கு மட்டுமே பயன் தருகின்றன. ஆனால் நம்வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு பருக்களையும், பரு வடுக்களையும் நிரந்தரமாக நிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
விற்றமின் சி சத்து நிறைந்த பழங்கள் முகத்தில் உள்ள பருவின் வடுக்களை போக்கும். எலுமிச்சை மிகச்சிறந்த நிவாரணி.

பாலை கெட்டியாக காய்ச்சி அதில் எலுமிச்சை சாறு விட்டு பின்பு அதை குளிர வைக்கவும். பின்னர் தனியாக ஒரு துணியில் வடிகட்டி கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்தக்கலவையை இரவு தூங்கச்செல்வதற்கு முன்பு முகத்தில் தடவி அடுத்தநாள் காலையில் முகம் கழுவினால் பருக்கள் மாறி முகம் மென்மையாக மாறி பொலிவு பெறும்.

எலுமிச்சையை துண்டுகளாக வெட்டி அதனை தழும்புகளின் மேல் பூசலாம். வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் செய்து வர தழும்புகள் மறையும்.

தக்காளி மற்றும் வெள்ளரிக்கய்யை துண்டுகளாக வெட்டி வைத்துக்கொண்டு பருக்களின் தழும்புகளின் மேல் தடவுங்கள்.

மல்லி மற்றும் லோத்ரா பட்டை ஆகிய இரண்டையும் இரவில் ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவி வைக்கவும். மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும். வாரத்துக்கு இரண்டு முறை இவ்வாறு செய்தால் தழும்புகள் படிப்படியாக மறையத்தொடங்கும்.

துளசி இலையை எடுத்து, நன்கு காயவைத்து பொடி செய்து, அதில் மஞ்சள்தூள் கலந்து குளிப்பதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்யவும். நன்கு உலர்ந்த பிறகு குளித்தால் சில நாட்களிலேயே பருக்களும், வடுக்களும் காணாமல் போய்விடும்.

வெந்தயக்கீரையை அரைத்து அதை முகத்தில் போட முகப்பருக்கள் மாறி முகம் மென்மையாக மாறும்.

சின்ன ஐஸ் க்யூப்பை எடுத்து அதனை பொலுத்தீன் கவரில் போட்டு முகத்தில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply