பரங்கிக்காய் காரக்குழம்பு

Loading...

பரங்கிக்காய் காரக்குழம்பு
தேவையானவை:
பரங்கிக்கீற்று – ஒன்று, புளி – ஒரு பெரிய எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து, புளியைக் கரைத்து விட்டு, தேவை யான உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கூடவே பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு நன்கு வெந்ததும் பெருங் காயத்தூள் சேர்த்து இறக்கவும்.


குறிப்பு:
விருப்பமான காய்களில் இதே முறையில் காரக்குழம்பு தயாரிக்கலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply