பப்பாளி கேசரி/papaya kesari

Loading...

பப்பாளி கேசரி papaya kesari


தேவையான பொருள்கள்

பப்பாளித் துண்டுகள் – ஒரு கப்
ரவை – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
பால் – கால் கப்
நெய், முந்திரி – தேவையான அளவு
ஏலக்காய் – 2


செய்முறை:

பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் ரவையை சேர்த்து வறுத்து எடுக்கவும்.

அதன் பிறகு ஒரு கப் ரவைக்கு 2கப் தண்ணீர் விட்டு கலர் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்ததும் ரவையை கொட்டி கட்டி தட்டாமல் கிளறி விடவும். ஏலக்காயை பொடித்து சேர்க்கவும்.

பின்னர் பாத்திரத்தை மூடி வைத்து வேக விடவும். ரவை வெந்ததும் சர்க்கரை மற்றும் அரைத்த பப்பாளி விழுதை சேர்க்கவும்.

கலவை ஒன்று சேர்ந்து வெந்து கெட்டியாகி வரும் போது நெய், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.

சுவையான பப்பாளி கேசரி தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply