பட்டர் முறுக்கு

Loading...

பட்டர் முறுக்கு
தேவையானவை:
இட்லி புழுங்கலரிசி – 4 கப், பொட்டுக்கடலை மாவு (சலித்தது) – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), பெருங்காயத்தூள் – சிறிதளவு, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:
இட்லி புழுங்கல் அரிசியைக் கழுவி, காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும் (அரைக்கும் போது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்). அரைத்த மாவுடன் பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், எள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி நன்கு சூடாக்கவும். முள் முறுக்கு அச்சில் மாவை போட்டு, முறுக்குகளாக எண்ணெயில் பிழிந்து, பொன்நிறமாக சிவந்ததும் எடுக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply