நெய் அப்பம்

Loading...

நெய் அப்பம்
தேவையானவை:
பச்சரிசி, பொடித்த வெல்லம் – தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, வாழைப்பழம் – ஒன்று (மசித்துக்கொள்ளவும்), கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய், தேங்காய் எண்ணெய் – தலா அரை கப்.


செய்முறை:
பச்சரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, விழுதாக அரைக்கவும். மாவுடன் வெல்லம், ஏலக்காய்த் தூள், மசித்த வாழைப்பழம், கோதுமை மாவு சேர்த்து சில நிமிடங்கள் அரைக்கவும். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். தேங்காய் எண்ணெய், நெய்யை ஒன் றாக சேர்க்கவும். இந்தக் கலவையை பணியார சட்டியின் குழிகளில் விட்டு, சூடானதும், கரண்டியால் மாவை எடுத்து ஊற்றி அப்பமாக சுட்டு எடுக்கவும். (அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்).

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply