நெட்டு வரிசை மறைத்துக் காட்ட…

Loading...

நெட்டு வரிசை மறைத்துக் காட்ட…எக்ஸெல் தொகுப்பில் நெட்டு வரிசை களை மிக எளிதாக மறைத்துப் பின்னர் தேவைப்படுகையில் மீண்டும் கொண்டு வரவும் செய்திட லாம். ஒருமுறை ஒரு நெட்டு வரிசை மறைக்கப்பட்டு விட்டால், அது காட்டப்பட மாட்டாது; அச்சடிக்கையிலும் அது அச்சடிக்கப்படாது. இருப்பினும் அந்த நெட்டு வரிசை நீக்கப்படவில்லை; அதன் அகலம் “0′ ஆக மாற்றப்படுகிறது. நெட்டு வரிசை ஒன்றை மறைக்க கீழ்க் காணும் குறிப்பு படி செயல்படவும்.நீங்கள் எக்ஸெல் 2007 தொகுப்பினைப் பயன்படுத்துபவராக இருந்தால்:

1. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட, நீங்கள் மறைக்க விரும்பும் நெட்டுவரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் ஹோம் டேப் காட்டப்பட வேண்டும்.
3. அடுத்து Cells குரூப்பில் உள்ள Format டூலில் கிளிக் செய்திடவும். இங்கு எக்ஸெல் வரிசையாக சில ஆப்ஷன்களைக் காட்டும்.
4. இதில் Hide & Unhide கிளிக் செய்து, பின்னர் Hide Columns கிளிக் செய்திடவும்.நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 2007க்கு முந்தைய புரோகிராமாக இருந்தால்:

1.ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட, நீங்கள் மறைக்க விரும்பும் நெட்டுவரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Format மெனுவில் இருந்து Column என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இன்னொரு துணை மெனு காட்டப்படும்.
3. இந்த மெனுவில் Hide என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
டிஸ்பிளேயிலிருந்து நெட்டு வரிசைகள் மறைக்கப்படும். இதில் இன்னொன்றை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு மறைக்கப்படுகையில், மற்ற நெட்டு வரிசைகள் மாறுவதில்லை. அதே இடத்தில் அதே வரிசை லேபிள்களுடன் காட்டப்படு கின்றன. ஆனால், இவ்வாறு மறைக்கப்பட்டதைக் காட்ட, வரிசைக்கான ஹெடர் ஏரியாவில் உள்ள பிரிக்கும் கோடு, சற்று கூடுதலான அழுத்தத்துடன் காட்டப்படும்.
பின்னர், உங்களுக்கு மறைக்கப்பட்ட இந்த நெட்டு வரிசைகள் தேவைப்பட்டால், எப்படி அவற்றை மீண்டும் காட்சிக்குக் கொண்டு வருவது என்று பார்க்கலாம்.நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்களாக இருந்தால்,

1. மறைக்கப்பட்ட நெட்டு வரிசையின் இருபுறமும் உள்ள வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் ஹோம் டேப் தெரியட்டும்.
3. அடுத்து Cells குரூப்பில் உள்ள Format டூலில் கிளிக் செய்திடவும். இங்கு எக்ஸெல் வரிசையாக சில ஆப்ஷன்களைக் காட்டும்.
4. இதில் Hide & Unhide கிளிக் செய்து, பின்னர் Unhide Columns கிளிக் செய்திடவும்.நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 2007க்கு பிந்திய புரோகிராமாக இருந்தால்:

1. மறைக்கப்பட்ட நெட்டு வரிசையின் இருபுறமும் உள்ள வரிசைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Format மெனுவில் இருந்து Column என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது இன்னொரு துணை மெனு காட்டப்படும்.
3. இந்த மெனுவில் Unhide என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
இனி நீங்கள் மறைத்து வைத்த நெட்டு வரிசைகளை மீண்டும் பார்க்க முடியும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply