நீருக்கு அடியில் இராட்சத டேட்டா சென்டரை நிறுவும் மைக்ரோசொப்ட்

Loading...

நீருக்கு அடியில் இராட்சத டேட்டா சென்டரை நிறுவும் மைக்ரோசொப்ட்கணினி உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனமாக மைக்ரோசொப்ட் நிறுவனம் விளங்குவது அறிந்ததே.
இந் நிறுவனம் தற்போது மற்றுமொரு புதிய புரட்சியில் ஈடுபட்டுள்ளது.

அதாவது தனது டே்டா சென்டரினை நீரிற்கு அடியில் நிறுவும் முயற்சியே அதுவாகும். இம் முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

டேட்டா சென்டர்கள் தொடர்ச்சியாக செயற்படும்போது வெளியாகும் வெப்பத்தின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொருட்டே இம் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்காக கடல் மட்டத்திலிருந்து சுமார் 100 அடிகள் ஆழத்தில் நிறுவப்படவுள்ளது.

மேலும் இந்த டேட்டா சென்டருக்கான மின்சக்தியினை நீர் மேற்பரப்பில் உண்டாகும் அலையினைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply