நீரிழிவு நோயாளிகளே ஒட்டக பால் குடியுங்கள்!

Loading...

camel_milk_002ஒட்டக பால் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
அதுமட்டுமின்றி, நீரிழிவு நோய், மனவளர்ச்சி குறைபாடு பிரச்சனைகள் மற்றும் அலர்ஜி போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது.


அடங்கியுள்ள சத்துக்கள்

ஒரு கப் ஒட்டக பாலில், புரோட்டின் – 10 சதவீதம், பொட்டாசியம் – 11 சதவீதம், பாஸ்பரஸ் – 15 சதவீதம், கால்சியம் – 30 சதவீதம், விட்டமின் B1 – 70 சதவீதம், இரும்புச்சத்து, விட்டமின் சி மற்றும் புரதச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.


மருத்துவ பயன்கள்

மாட்டுப்பால், ஆட்டுப்பால் போன்றவற்றோடு ஒப்பிட்டு பார்க்கையில் ஒட்டக பாலில் கொழுப்பு சத்து குறைவு.

எனவே, இதனை குடிப்பதால் உடல் எடை அதிகரிக்காது.

குளுகோஸ் மற்றும் இன்சுலின் ஹார்மோன் ஆகியவை சரியான அளவில் இருந்தால் நீரிழிவு நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். ஒட்டக பாலினை குடிப்பதன் மூலம் இன்சுலின் ஹார்மோன் சீரான அளவில் சுரக்கிறது.

அதிக அளவில் புரோட்டின் சத்து மற்றும் கரிம சேர்மங்கள் நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

நமது உடலில் உள்ள எலும்புகள், உடல் உறுப்புகள் போன்றவை வளர்ச்சியடைவதற்கு இந்த ஒட்டக பால் குடிக்கலாம்.

இதில் நிறைந்துள்ள இரும்புச்சத்து ரத்த சோகை குறைபாட்டிலிருந்து பாதுகாத்து, உடலில் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க உதவுகிறது.

பிரசவ காலங்கள் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஒட்டக பாலினை குடித்தால் ஆரோக்கியம் மேம்படும்,

நரம்பியல் அமைப்பு செயல்பாட்டிற்கு உதவுவதால் ஆட்டிசம் குறைபாடு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

ஒட்டக பாலில் ஒவ்வாமை எதிர்வினைகள் இல்லாத காரணத்தால், இதனால் உடலுக்கு எவ்வித அலர்ஜியும் ஏற்படாது.

உடலில் கொழுப்பின் அளவை சீரான அளவில் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

அதுமட்டுமின்றி, மாரடைப்பு, பக்கவாதம், இரத்த அழுத்தம் போன்றவற்றை குறைக்கிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply