நியூயோர்க்கிலிருந்து லண்டன் பறக்க 11 நிமிடங்கள் போதும்: வருகிறது புதிய ஹைப்பர்சோனிக் ஜெட்

Loading...

நியூயோர்க்கிலிருந்து லண்டன் பறக்க 11 நிமிடங்கள் போதும் வருகிறது புதிய ஹைப்பர்சோனிக் ஜெட்ஒலியை விடவும் வேகமாக பயணம் செய்யக்கூடிய பல ஜெட் விமானங்கள் தற்போது பாவனையில் உள்ளன.
இவற்றினை எல்லாம் தாண்டி மணிக்கு 20,000 கிலோமீற்றர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய ஜெட் விமானம் ஒன்றிற்கான மாதிரித் திட்டத்தினை கனடிய விஞ்ஞானியான Charles Bombardier என்பவர் முன்வைத்துள்ளார்.

75 பயணிகளை ஏற்றிக்கொண்டு பறக்கக்கூடிய இவ் விமானம் ஒலியை விடவும் 10 மடங்கு வேகம் கொண்டதாகவும். தற்போதுள்ள கொன்ஹோட் விமானங்களை விடவும் 5 மடங்கு வேகம் உடையதாகவும் பறக்கக்கூடியது.

மேலும் திரவ ஒட்சிசனை எரிபொருளாக பயன்படுத்தக்கூடிய இந்த விமானத்தின் மூலம் நியூயோர்க்கிலிருந்து லண்டனிற்கு 11 நிமிடங்களில் சென்றடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply