நவாபி வெஜ் கறி

Loading...

நவாபி வெஜ் கறி
தேவையானவை:
வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட் – தலா ஒன்று, பீன்ஸ் – 10, பச்சைப் பட்டாணி – ஒரு கப், பச்சை மிளகாய் – 4 , இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 4 பல், முந்திரி – 8, தேங்காய்ப் பால் – அரை கப், ஃப்ரெஷ் தயிர் – 3 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை – அரை கட்டு, ஃப்ரெஷ் க்ரீம், நெய் – தலா 4 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
அரைக்க: தேங்காய் துருவல் – ஒரு கப், லவங்கம், ஏலக்காய் – தலா 3, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்.


செய்முறை:
வெங்காயம், பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை சின்னச் சின்ன சதுர துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். முந்திரியை சுடுநீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒன்று சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடி கனமான வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, மற்ற காய்கறிகள், இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய், அரைத்த தேங்காய் மசாலா, உப்பு என ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கி, கொஞ்சம் நீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு, தேங்காய்ப் பால், தயிர், முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். இறக்கும் முன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply