நயன்தாரா படத்தில் எந்திரன் ராப் பாடகி

Loading...

நயன்தாரா படத்தில் எந்திரன் ராப் பாடகி

நயன்தாரா அடுத்ததாக சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தை இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கின்றனர். திகில் கலந்த காமெடி திரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் ஆகியோர் இணைந்து இசையமைக்கவிருக்கிறார்கள்.

விவேக்-மெர்வின் இருவரும் ஏற்கெனவே, ‘வடகறி’, ‘புகழ்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இவர்கள் இசையமைக்கும் இந்த படத்தில் கதையோடு ஒன்றியே பாடல்கள் அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘எந்திரன்’ படத்தில் வரும் ‘இரும்பிலே ஒரு இருதயம்’ பாடலில் ராப்பிங் பாடிய லேடி காஷ் ஒரு பாடலை பாடவிருக்கிறாராம். இந்த பாடல் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

விவேக்-மெர்வின் இருவரும் தனி இசை ஆல்பம் ஒன்றையும் கூடிய விரைவில் தயாரித்து வெளியிடவுள்ளனர். ‘ஹே புள்ள’ என்ற அந்த வீடியோ ஆல்பத்தை இந்த மாத இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த ஆல்பத்துக்கான காட்சிகள் அனைத்தையும் மலேசியாவில் படமாக்கியுள்ளனர். மலேசியா ராப் பாடகர்கள் பலரும் இந்த ஆல்பத்தில் பாடியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply