நட்டத்தில் சொனி: பத்தாயிரம் பேரை வேலை நீக்கம் செய்யவுள்ளது!

Loading...

நட்டத்தில் சொனி பத்தாயிரம் பேரை வேலை நீக்கம் செய்யவுள்ளது!பெரும் நட்டத்தை சமாளிக்க தடுமாறி வருகின்ற ஜப்பானிய ”சோனி” மின்னணு நிறுவனம், தனது ஊழியர்களில் 6 வீதத்தினரை அதாவது பத்தாயிரம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக கூறியுள்ளது.

அடுத்த 12 மாதங்களில் உலகில் பல பாகங்களில் உள்ள தமது பணியிடங்களில் இந்த வேலை வெட்டு நடைபெறும் என்று அது கூறியுள்ளது.

தனது இவ்வருடத்துக்கான நட்டத்தின் மதிப்பீட்டை செவ்வாயன்று, இரண்டு மடங்காக அதாவது 640 கோடி டாலர்களாக அது அதிகரித்து, அறிவித்திருக்கிறது.

தொலைக்காட்சி வணிகத்தில் சம்சொங் மற்றும் தொலைபேசி வணிகத்தில் ஆப்பிள் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சோனி பெரும் போட்டியை எதிர்கொள்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply