தொழில்நுட்ப புரட்சிக்கு தயாராகும் சோலார் பேனல் வீதிகள்

Loading...

தொழில்நுட்ப புரட்சிக்கு தயாராகும் சோலார் பேனல் வீதிகள்சம காலத்தில் மின் உற்பத்தியில் சோலார் பேனல் மூலமான மின் உற்பத்திக்கே அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக சோலார் பேனலினால் வீதிகள் வடிவமைக்கும் முயற்சியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், முதற் கட்டமாக 1000 கிலோமீற்றர்கள் நீளமான வீதியை அடுத்துவரும் 5 வருடங்களுக்குள் நிர்மாணித்து முடிக்க திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் பிரான்ஸ் நாட்டு சனத்தொகையின் 8 சதவீதமானவர்களின் (5 மில்லியன் மக்கள்) மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் எண்ணியுள்ளது.

இத்திட்டத்தினை பிரான்ஸ் நாட்டு வீதி நிர்மாண நிறுவனமான Colas மற்றும் சூரிய சக்திக்கான தேசிய நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply