தேங்காய்பால் மீன் சால்னா (Coconut Milk Fish Gravy)

Loading...

தேங்காய்பால் மீன் சால்னா (Coconut Milk Fish Gravy)


தேவையானவை :

மீன் – 1/2 கிலோ

தக்காளி – 2

வெங்காயம் – 1

பூண்டு – 1

பச்சை மிளகாய் – 2

தேங்காய்பால் – 3 கப்

வெந்தயம் – 1 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

மல்லி தூள் – 2 ஸ்பூன்

மிளகு சீரகத்தூள் – 1ஸ்பூன்

எலுமிச்சை பழம் – 1

மல்லி கீரை – 1கட்டு

எண்ணெய் – 3 ஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப


செய்முறை :

1.முதலில் வெங்காயத்தையும்,பாதி பூண்டையும் நசுக்கிக் கொள்ளவும்,தக்காளியையும் மீதியுள்ள பூண்டையும் நறுக்கி கொள்ள வேண்டும்.

2.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நசுக்கிய வெங்காயம், பூண்டை போட்டு தளித்து, சிவந்து வரும்போது வெந்தயம் போட்டு, வாசம் வந்தவுடன் மிளகாய் தூள் போட்டு, வெட்டி வைத்துள்ள தக்காளியையும் பூண்டையும் போட்டு வதக்கவேண்டும்.

3.மசாலா நன்கு வதங்கியவுடன் தேங்காய்பாலில் மஞ்சள் தூள், மல்லிதூள்,மிளகு சீரகத்தூள், உப்பு போட்டு,பச்சை மிளகாயை அதில் உடைத்து போட்டு தாளித்ததில் ஊற்றி, மீன் துண்டுகளையும் போட்டு வேகவிட வேண்டும்.வெந்தவுடன் எலுமிச்சை பழத்தை பிழிந்து ஊற்றி,மல்லி தலையையும் நைஸாக அரிந்து போட்டு இறக்கி விடலாம்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply