தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டுமா? | Tamil Serial Today Org

தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டுமா?

Loading...

தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டுமாகூந்தல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் தலைக்கு குளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
அதற்காக தினமும் தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் இன்றைய சுற்றுப்புற சூழல் அதிகளவு மாசடைந்திருப்பதால், தினமும் தலைக்கு குளிக்க வேண்டும்.

எனவே பொடுகு தொல்லை ஏதுமில்லாமல் கூந்தல் அடர்த்தியாக வளரும்.

இரவு படுக்க செல்வதற்கு முன்பாக தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து தலையில் தடவி, மறுநாள் காலையில் அலசலாம், இதனால் கூந்தல் மிருதுவாக இருப்பதுடன் உதிர்வும் குறையும்.

கூந்தல் அடர்த்தி குறைவாக இருந்தால் அதற்கு நெல்லிக்காய் எண்ணெய் மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.

நெல்லிக்காய் பொடியை, சீகைக்காய் பொடி மற்றும் ஹென்னாவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு குளித்து வந்தால், கூந்தல் அடர்த்தியாகும்.

நல்லெண்ணெய், கடுகெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

இதனை இரவுபடுக்கும் முன் தலைக்கு தேய்த்து காலையில் அலசலாம்.

இதேபோன்று வார இறுதி நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம், அந்த எண்ணெய் கலவையில் ஒரு வாரம் விளக்கெண்ணெய், இன்னொரு வாரம் கடுகெண்ணெய், பிறகு ஐந்தெண்ணெய் இப்படி இருக்கும்படி மாற்றிக் கொள்ளலாம். இப்படி செய்வதால் உடல் சூடு தணிந்து, மன அழுத்தம் குறைகிறது.

Loading...
Rates : 0
VTST BN