தினமும் ஒரு கப் கேரட் ஜூஸ்! நன்மைகளோ ஏராளம்

Loading...

தினமும் ஒரு கப் கேரட் ஜூஸ்! நன்மைகளோ ஏராளம்கேரட் என்றதுமே நம் மனதில் முதலில் தோன்றுவது கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் என்பது தான்.
ஆம், கேரட் மிகச்சிறந்த ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி.

கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்றுப்பார்த்தால், கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும்.

கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின் தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது, வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது.

கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.

கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும், இதேபோன்று ஜூஸாகவும் செய்து குடிக்கலாம்.

* தற்போது கணினி முன்பு வேலைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி மொபைலை அதிக நேரம் உற்றுப் பார்ப்பதன் மூலமும் பார்வை கோளாறு விரைவில் ஏற்படும். எனவே இத்தகையவற்றை தவிர்க்க தினமும் கேரட் ஜூஸ் குடித்து வருவது நல்லது.

* கேரட்டில் உள்ள கரோட்டீனாய்டு என்னும் பொருள் இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவும். எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால், சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கலாம்.

* தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இதனை தினமும் குடிப்பதன் மூலம் தாய்ப்பாலின் அளவு அதிகரிப்பதோடு, கால்சியம் குறைபாடு தடுக்கப்பட்டு, குழந்தைக்கு வேண்டிய வைட்டமின் ஏ சத்து கிடைத்து, குழந்தையின் ஆரோக்கியமும் மேம்படும்.

* மேலும் வைட்டமின் ஏ குறைபாடு சரிசெய்யப்பட்டு சருமம் வறட்சி அடையாமல் பொலிவுடன் இருக்கும்.

* உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் குடித்தால், செரிமான அமிலத்தின் சுரப்பு சீராக தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

* சுவாச பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply