தக்காளி தொக்கு

Loading...

தக்காளி தொக்கு
தேவையானவை:
பழுத்த தக்காளி – 10, மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன் மஞ்சள்தூள், கடுகு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:
நீரை சூடாக்கி, தக்காளியைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் தோலை எடுத்துவிட்டு, விழுதாக அரைக்கவும். அடி கனமான கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்த தக்காளி விழுது, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில்வைத்து, மூடி போட்டு, அவ்வப்போது திறந்து, அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். தக்காளி கலவை நன்றாக சுருண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும் (விருப்பப்பட்டால் கடைசியில் மிகவும் சிறிதளவு சர்க்கரை (அ) வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கலாம்).


குறிப்பு:
இதை சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளலாம். உப்பு குறைந்தால், தொக்கு சீக்கிரம் கெட்டுவிடும். தேவையான அளவு உப்பு போடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply