டோர்ட்டில்லா சூப்

Loading...

டோர்ட்டில்லா சூப்
தேவையானவை:
டோர்ட்டில்லா – 2 (செய்யும் விதம்: அடுத்த பக்கத்தில்), நறுக்கிய கலர் குடமிளகாய் – ஒரு கப், ஸ்வீட் கார்ன் – கால் கப், வெங்காயம் – ஒன்று, பூண்டு – 5 பற்கள், தக்காளி – 3, நறுக்கிய ஜுக்கினி (வெள்ளரி போன்றிருக்கும்) – கால் கப், ராஜ்மா – கால் கப், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், ஆரிகனோ (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில், உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:
டோர்ட்டில்லாக்களை இறுக்கமாக சுற்றி நூடுல்ஸ் போல வெட்டி… ஒரு கடாயில் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவும். ராஜ்மாவை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவும். அதில் ஒரு பாதியை எடுத்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் கொஞ்சம் சிறிதளவு ஆலிவ் ஆயில் சேர்த்து நறுக்கிய குடமிளகாய், ஜுக்கினோ, ஸ்வீட் கார்ன் சேர்த்து வதக்கி வைக்கவும். தக்காளியை வேகவைத்து, தோல் உரித்து மசித்து, வடிகட்டவும்.
வேறு ஒரு கடாயில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு… நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளிச் சாறு சேர்க்கவும். அத னுடன் உப்பு, சீரகத்தூள், ஆரிகனோ, மிளகாய்த்தூள், மசித்த ராஜ்மா சேர்த்துக் கொதிக்கவிடவும். கடைசியாக, வதக்கி வைத்த குடமிளகாய், ஜுக்கினோ, ஸ்வீட் கார்ன் சேர்த்து… ராஜ்மா, டோர்ட்டில்லா, தேவைக் கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கிப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply