டிரெயின் இட்லி

Loading...

டிரெயின் இட்லி

தேவையானவை:
இட்லி – 5, இட்லி மிளகாய்ப்பொடி – 4 டீஸ்பூன், நல்லெண்ணெய் – தேவையான அளவு.செய்முறை:
இட்லி செய்த உடன் நன்றாக ஆறவிடவும். இட்லி மிளகாய்ப்பொடியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு கலக்கவும். இதில் இட்லியைப் போட்டு புரட்டி எடுக்கவும் (இட்லி மிளகாய்ப்பொடி இட்லி முழு வதும் படும்படி புரட்ட வேண்டும்). மிளகாய்ப்பொடியில் ஊறிய இட்லி, சுவையில் அள்ளும். சாப்பிடும் இடமே மணக்கும்.இட்லி மிளகாய்ப்பொடி செய்முறை:
கடலைப்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 10 (அல்லது காரத்துக்கேற்ப), கட்டிப் பெருங்காயம் – சிறிய நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய், கல் உப்பு – தேவைக்கேற்ப, புளி – சிறிதளவு, வெள்ளை எள் (விருப்பப்பட்டால்) – 2 டீஸ்பூன். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கொடுக்கப்பட்டுள்ள வற்றை ஒவ்வொன்றாக சிவக்க வறுத்து ஆறவிடவும். பிறகு, கொரகொரப்பாக பொடிக்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு பொடித்த வெல்லம் சேர்த்து அரைக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply