ஜீரா போளி

Loading...

ஜீரா போளி

தேவையானவை:
ரவை, சர்க்கரை – தலா 200 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – 500 மில்லி.செய்முறை:
ரவையை தண்ணீர், கேசரி பவுடர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு, இதை மீண்டும் பிசைந்து அப்பள வடிவில் இட்டு எண்ணெயில் பொரிக்கவும். சர்க்கரைப் பாகு வைத்து (கம்பிப் பதம்), பொரித்த போளிகளைப் போட்டு இருபுறமும் சர்க்கரைப் பாகு படும்படி புரட்டி, தனியாக தட்டில் எடுத்து வைக்கவும். மேலே ஏலக்காய்த்தூள் தூவி பரிமாறவும்.


குறிப்பு:
இதை சாதாரண ரவையில் செய்ய வேண்டும். ரோஸ்டட் ரவை பயன்படுத்தக் கூடாது. ஒரு வாரம் வரை வைத்தி ருந்து சாப்பிடலாம். கொதிக்கும் பாலில் இந்த போளியை நனைத்து எடுத்து, ஊறிய உடன் சாப்பிட்டால்… சூப்பர் சுவையில் இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply