ஜிமெயில் மின்னஞ்சலி​ன் சேமிப்பு வசதி 10GB ஆக அதிகரிப்பு!

Loading...

ஜிமெயில் மின்னஞ்சலி​ன் சேமிப்பு வசதி 10GB ஆக அதிகரிப்பு!மின்னஞ்சல் சேவைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனமான ஜிமெயில் தனது பயனர்களுக்கான மின்னஞ்சல் சேமிக்கும் வசதியை 7.5GB இலிருந்து 10GB ஆக அதிகரித்துள்ளது.

Google Drive எனும் இலவச ஓன்லைன் சேமிப்பு வசதிக்கு சமாந்தரமாகவே இந்த மின்னஞ்சல் சேமிப்பு வசதி அதிகரிப்பு காணப்படுகின்றது.

எனினும் இந்த 10GB சேமிப்பு வசதியை கட்டணம் செலுத்துவதன் மூலம் 25GB ஆக அதிகரிக்க முடியும். இவ்வசதியானது இன்றைய தினத்திலிருந்து நடைமுறைக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் Google Drive இன் மூலம் வீடியோ, படங்கள் போன்ற கோப்புக்களுடன் Google Docs, PDF போன்ற கோப்புக்களை தரவேற்றம் செய்தல், தரவிறக்கம் செய்தல் என்பனவற்றை மேற்கொள்ள முடியும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply