சூரியனின் மேற்பரப்பில் 2 துளைகள்: படங்களை வெளியிட்டது நாசா

Loading...

சூரியனின் மேற்பரப்பில் 2 துளைகள் படங்களை வெளியிட்டது நாசாசூரியனின் மேற்பரப்பில் இரண்டு மிகப்பெரிய துளைகள் இருப்பதை நாசாவின் விண்வெளி ஆய்வுமையம் கண்டுபிடித்துள்ளது.
சூரியனின் தென் துருவ பகுதியில் கேரோணல்(Coronal holes) எனப்படும் இரண்டு மிகப்பெரிய துளைகள் உள்ளன.
இதில் ஒரு துளை சூரியனின் மேற்பரப்பில் 6 முதல் 8 சதவிகிதம் வரை(142 பில்லியன் சதுர மைல்) ஆக்கிரமித்துள்ளது.
மற்றொரு சிறிய துளையானது துருவத்தின் எதிர்முனையை நோக்கி இருப்பதுடன் 0.16 சதவிகிதம்(3.8 பில்லியன் சதுர மைல்) என்ற அளவிலேயே உள்ளது.
இதுகுறித்து நாசா கூறுகையில், கோரோணல் துளைகள் சூரியனின் மேற்பரப்பில் அடர்த்தி குறைந்த மற்றும் வெப்பநிலை உள்ள பகுதிகளில் உள்ளன என்றும், இவைகள் மாறிக்கொண்டே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சூரியனை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட Solar Dynamics Observatory என்னும் விண்கலத்தில் உள்ள Atmospheric Imaging Assembly (AIA) எனப்படும் கமெராவே இதனை படம்பிடித்து அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply