சுறா பூண்டு குழம்பு (Shark Garlic Gravy)

Loading...

சுறா பூண்டு குழம்பு (Shark Garlic Gravy)

தேவையானவை :

சுறா – அரை கிலோ

பூண்டு – 3

மிளகுத்தூள் – 3 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

தனியாத்தூள் – 3 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

பச்சைமிளகாய் – 3 கீறியது

கடுகு – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

சீரகம் – 1 தேக்கரண்டி

புளி – எலுமிச்சம் பழ அளவு

வெந்தயம் – 1 தேக்கரண்டி

வெங்காயம், தக்காளி – 200 கிராம்

கொத்தமல்லி இலை – அரை கட்டு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

1. ஒரு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். உரித்த பூண்டு, தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

2. பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் இவற்றைச் சேர்த்து சிறிது நீர் விடவும். போதுமான உப்பு சேர்க்கவும், அதனுடன் சுறாவைச் சேர்த்து வேக விடவும்.

3. சுறா வெந்தவுடன் கரைத்த புளியையும் சேர்க்கவும். அதனுடன் சீரகம், மிளகுத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து குழம்பு நன்கு கெட்டியானதும், கொத்தமல்லி இலை தூவி இறக்கிப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply